ரெய்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 708 days ago
கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்து வெளிவந்த 'தகறு' படத்தை தமிழில் 'ரெய்டு' எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இயக்குனர் முத்தையா வசனத்தில் கார்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனன்திகா, சௌந்தரராஜா, ரிஷி ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது என ஏற்கனவே அறிவித்தனர். தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் சில நாட்கள் முன்பே இப்படம் நவம்பர் 10ந் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.