உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்!

கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்!


கமலும், ரஜினியும் 47 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கான அறிவிப்பு விளம்பரம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கோலிவுட்டின் இரண்டு ஜாம்பவான்களையும் ஒரே படத்தில் இணைக்க போகிறார். அதனால் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. குறிப்பாக சமீப காலமாக ரஜினி படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் அனிருத் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து அனிருத் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ''கமல், ரஜினி இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. 2027ம் ஆண்டின் பிற்பகுதியில் திரைக்கு வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு என்றாலும் அவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைவதற்கு முன்பாக பாடல் கம்போசிங், ரெக்கார்டிங் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து விடுவதற்கு நானும் இயக்குனர் நெல்சனும் திட்டமிட்டுள்ளோம்'' என்று கூறி இருக்கிறார் அனிருத். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !