உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம்

போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம்

தமிழ் சினிமாவில் முன்னனி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இப்போது ஹீரோவாகவும், காமெடி ரோல்களிலும் நடிக்கிறார். 'மாமன்னன்' படத்தில் காமெடியை விட்டு விலகி முற்றிலும் மாறுபட்ட நடிப்பை தந்து பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது பிரபுதேவா உடன் ‛பேங் பேங்' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மலையாளத்தில் 'போங்கலா' என்ற படத்தை இயக்கிய பினிலின் அடுத்த படத்தில் வடிவேலு நடிக்க உள்ளார். ‛போர்முழக்கம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லாலு மற்றும் டோனா தாமஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இதனை பினில் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதில் வடிவேலு வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‛லண்டன், எல்லாம் அவன் செயல்' போன்ற படங்களில் வக்கீலாக காமெடி ரோலில் வடிவேலு நடித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !