தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர்
ADDED : 3 days ago
ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக 'தேவரா' என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தற்போது ராம்சரணுடன் 'பெத்தி' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது.
இந்நிலையில் ஜான்வி கபூர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''தென் மாநிலங்களுடனான தனது உணர்ச்சிபூர்வமான பிணைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் கலாசாரத்துடன் நான் மிகவும் இணைந்திருப்பதாக உணர்கிறேன். காரணம் இது எனக்கு மிகவும் பரிட்சயமானது. எனது அடையாளத்தின் ஒரு பெரிய பகுதியாகும். மேலும் தமிழில் ஓரளவு பேச தெரியும் என்றாலும் தற்போது தெலுங்கு பேசுவதற்கும் பயிற்சி எடுத்து வருகிறேன்'' என்று தெரிவித்துள்ளார் ஜான்வி கபூர்.