மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
696 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
696 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
696 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
696 days ago
அமீர் பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் அமீர் தயாரித்து, நடிக்கும் படம் 'மாயவலை'. இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிடுகிறது. ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் 'தயா' செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில் படம் தயாராகி உள்ளது.
வெற்றி மாறன் பேசியதாவது : நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி. இரண்டையும் ஒரு சிலரால் தான் சமாளிக்க முடியும், அது என்னிடம் இல்லை. அதனால் இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை. பல இயக்குனர்கள் என்னை நடிக்க சொல்லி கேட்டு வருகிறார்கள், அவர்களுக்கு எனது பதில் இதுதான். எனக்கு நடிக்கத் தெரியும்தான். ஆனால் நடிக்க விருப்பம் இல்லை. அதனால் என்னை வற்புறுத்த வேண்டாம், என்றார்.
696 days ago
696 days ago
696 days ago
696 days ago