மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
666 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
666 days ago
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
666 days ago
கார்த்தி நடித்துள்ள 25வது படம் ஜப்பான். ராஜு முருகன் இயக்கி உள்ள இந்த படத்தில் அவருடன் அனு இம்மானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. நவம்பர் 10ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டச்சிங் டச்சிங் என்ற பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண் ராஜா காமராஜ் இந்த பாடலை எழுதியிருக்கிறார். அதோடு கார்த்தி இந்த பாடலை பின்னணி பாடியிருக்கிறார். அவருடன் இணைந்து இந்திராவதி சவுகான் என்பவரும் பாடியுள்ளார். அதோடு இந்த பாடல் வீடியோவில் இப்பாடலை பாடியவர் உங்கள் கோல்டன் ஸ்டார் ஜப்பான் என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டத்தை இந்த பாடலுக்காகதான் கொடுத்தார்களா? இல்லை இந்த படத்தின் டைட்டில் கார்டிலும் கார்த்திக்கு கோல்டன் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது படம் திரைக்கு வரும்போது தெரியவரும்.
666 days ago
666 days ago
666 days ago