மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
666 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
666 days ago
பாலிவுட்டின் பிரபலமான பாடகர் யோ யோ ஹனி சிங். பல படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இவர் பள்ளி காலத்திருந்தே 10 ஆண்டுகளாக காதலித்து வந்த ஷாலினி தல்வாரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்தார். கடந்த ஆண்டு ஹனி சிங் தன்னை கொடுமைப்படுத்துவதாக டில்லி நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார் ஷாலினி.
அந்த மனுவில், ஹனி சிங் தன்னை உடல் அளவிலும், மனதளவிலும் பலமுறை கொடுமைப்படுத்தியதாகவும் அவர் மது, போதைப்பொருளுக்கு அடிமையானார், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்றும் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஹனி சிங் அதனை மறுத்திருந்தார்.
கடந்த ஒரு ஆண்டாக நடந்து வந்த இந்த வழக்கிலில் டில்லி நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்கி உள்ளது. 10 வருடமாக காதலித்து 12 வருடமாக இணைந்து வாழ்ந்த தம்பதிகள் பிரிந்திருப்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
666 days ago
666 days ago