மலையாள பாடலில் நடிக்கும் சாக்ஷி அகர்வால்
ADDED : 695 days ago
சினிமா நடிகையான சாக்ஷி அகர்வால் கவர்ச்சியான புகைப்படங்களால் இன்ஸ்டாகிராமில் பிரபலமான மாடலாக வலம் வருகிறார். பிக்பாஸ் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த அவர், சினிமாவில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காமல் ப்ரேக்கிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில், வயல் வெளியில் வேலை செய்யும் கேரள பெண் கெட்டப்பில் சாக்ஷி அகர்வால் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தற்போது தான் ஒரு மலையாள பாடலில் நடித்து வருவதாகவும் விரைவில் டீசர் ரிலீஸாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பேமிலிக்காக ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.