விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா!
ADDED : 824 days ago
விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தில் லவ்டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இப்படத்தில் இருந்து கமலின் ராஜ்கமல் நிறுவனம் விலகியதால் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் இப்படத்தை தயாரிக்கிறார்.
மேலும், பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.