இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி 51வது படம்
ADDED : 842 days ago
நடிகர் விஜய் சேதுபதியின் 51வது படத்தை பி.ஆறுமுக குமார் இயக்கி, தயாரித்து வருகிறார். யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வந்தது. விஜய் சேதுபதியின் 51வது படமாக உருவாகும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.