மேலும் செய்திகள்
மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன்
686 days ago
முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம்
686 days ago
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
686 days ago
நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் அவ்வப்போது படங்களை இயக்கி நடித்தாலும் தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். ஒரு சில வருடங்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் நடித்து வெளிவந்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்கிற படத்தில் மக்கள் சூப்பர் ஸ்டார் லாரன்ஸ் என அடைமொழியை அந்த படத்தில் முதன்முறையாக வைத்தது மூலம் விமர்சனங்களுக்கு ஆளானார். பின்னர் அந்த பட்டத்தை துறந்தார்.
இதுபற்றி ராகவா லாரன்ஸ் சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியதாவது, “மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் மக்கள் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் இடம் பெற்றது. ஆனால் அதற்கு ரஜினி ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள் . அந்த சமயத்தில் எனக்கு அவ்வளவு பக்குவம் இல்லை. பின்னர் இயக்குனர் சாய் ரமணியை அழைத்து அதை நீங்கள் விருப்பப்பட்டு போட்ட மாதிரி சொல்லிவிடுங்கள். ரொம்ப தவறாக பேசுகிறார்கள் என கூறினேன். வீட்டில் என் அம்மா கூட என்னிடம் உன்னுடைய தலைவர் பெயரைத்தானே சேர்த்துக் கொண்டாய்? இதில் என்ன தவறு என என்னிடம் கேட்டார். அதற்கு நான் இனி இந்த பட்டம் வேண்டாம் மிக தவறாக பேசுகிறார்கள் என கூறினேன் என்றார்.
686 days ago
686 days ago
686 days ago