அஜித்திற்கு ஒரு பயங்கரமான கதை இருக்கு - அட்லி
ADDED : 684 days ago
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என நடிகர் விஜய்யை வைத்து வெற்றி படங்களை இயக்கினார். சமீபத்தில் பாலிவுட்டில் நடிகர் ஷாரூக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி அங்கும் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அஜித்தை வைத்து படம் இயக்குவது குறித்து அட்லி கூறியதாவது, ராஜா ராணி படத்திற்கு பிறகு நயன்தாரா உதவியுடன் அஜித்திற்கு முதலில் கதை சொல்ல முயன்றேன். அப்போது நான் பள்ளி மாணவன் போல் உள்ளதாக அஜித் என்னை கிண்டல் செய்தார் எனவும், அஜித்துக்காக ஒரு பயங்கரமான கதை இருப்பதாகவும், அஜித் ஓகே சொன்ன உடனேயே அந்த படத்தை எடுக்க நான் தயார் என பகிர்ந்துள்ளார்.