மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி
ADDED : 150 days ago
கடந்த 2012ம் ஆண்டில் கிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் கழுகு. சத்திய சிவா இயக்கிய இதில் அவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். அதன் பிறகு 2019ல் வெளியான கழுகு 2 படத்திலும் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக பிந்து மாதவியே நடித்திருந்தார். தற்போது கிருஷ்ணா நடிப்பில் அவரது 25 வது படம் திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. பால கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திலும் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீண்டும் பிந்து மாதவியே மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்.
கேரளா மற்றும் குற்றாலம் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.