தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி
நடிகை டாப்சி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், வை ராஜா வை, அனபெல் சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதேப்போல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் மட்டுமே அதிக படங்களில் நடித்து வருகிறார்.
டாப்சி அளித்த ஒரு பேட்டியில் தென்னிந்திய படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு நடந்த அசவுகரியம் ஆன விஷயத்தை குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், தென்னிந்திய திரைப்படத் துறையில், கிளாமர் காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளுக்கும் என்னை பேடட் உள்ளாடை அணியை சொன்னார்கள். அதை அணிந்தால் வேறுபாடு தெளிவாக தெரியும். அதை அனைவரும் கவனிப்பார்கள் என்பதால், அது எனக்கு மிகவும் அசவுகரியமாகவும், அவமானமாகவும் உணர்ந்தேன்.
பாலிவுட்டை விட தென் இந்திய சினிமாக்கள் கிளாமரை அதிகம் காண்பிக்கின்றனர். பாலிவுட்டில் கிளிவேஜை காட்டுவதில் கவனம் செலுத்துகிறார்கள். தென் இந்திய படங்கள் தொப்புளை ஆபாசமாக காட்டுகின்றனர்” என்றார்.