வாசகர்கள் கருத்துகள் (1)
எப்போ பராசக்தி படம் நடிச்சியோ அப்பவே உன் புத்தி தெரிஞ்சு போச்சு
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க, சிவகுமார் முருகேசன் இயக்க, ராதிகா நடிக்கும் தாய் கிழவி படத்தின் விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சரத்குமார், ஸ்ரீப்ரியா, சூரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அம்மா நடிக்கும் பட விழா என்பதால் ராதிகா மகன் ராகுலும் கலந்து கொண்டார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக படம் இயக்கிய அருண்ராஜ் காமராஜ், கார்த்திக் வேணுகோபால் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.
சிவகார்த்திகேயன் பேசுகையில் ''ராதிகாவின் தாய் கிழவி படமும், சரத்குமாரின் ஆழி படமும் வெற்றி பெற வேண்டும். இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இங்கே வந்து இருக்கிறார். அவர் ரஜினி பட இயக்குனர். ஆனாலும், அவர் மீண்டும் என்னுடன் படம் பண்ணுவதாக இருந்தது. ஒப்பந்தம் போட்டு இருக்கிறோம். நீங்க மீண்டும் வரணும். நானும், சூரியும் 30 ஆண்டுகள் கழித்தும் இதே நட்புடன் இருக்க வேண்டும்.
நான் நல்லா இருக்கிறேன். குடும்பம் நல்லா இருக்கிற நிலை வந்தபோது, என் நண்பன் அருண் ராஜாவுக்காக இந்த கம்பெனி ஆரம்பித்து கனா படத்தை தயாரித்தேன். நாங்க கனவுடன் திருச்சியில் இருந்து வந்தோம். இப்ப ஜெயித்து இருக்கிறோம். பெண்கள் பவர்புல் என்பதை காண்பிக்க கனா எடுத்தோம். உலகில் பெண்கள் கிரிக்கெட்டை வைத்து எடுக்கப்பட்ட படம் அது. கொட்டுக்காளி வரை அது சென்றது. அமரன் படத்துக்கு 8 விருதும், கொட்டுகாளிக்கு 2 விருதும் கிடைத்தது. கொட்டுக்காளி உலகின் பல இடங்களில் திரையிடப்பட்டது.
தாய் கிழவி படம், என் பாட்டி பிரான்மலைக்கு சென்ற பிலீங்கை தருகிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு, படத்துல நிறைய நட்சத்திரங்களை உருவாக்கி இருக்கீங்க என இயக்குனர் சிவகுமார் முருகேசனிடம் கமல் சார் சொன்னார். இந்த படத்தை ராதிகா மேடத்தை தவிர வேறு யாரும் பண்ண முடியாது. படப்பிடிப்பில் ராதிகாவிற்கு மூட்டு வலி வந்தது. ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம். ஆனால், மற்ற நடிகர்கள் கால்ஷீட் இல்லை. ஆகவே அதை புரிந்துகொண்டு அவர் நடித்துக் கொடுத்தார்.
இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்க ஆசைப்படுகிறேன். இந்த பெயர், புகழ், பணம் எனக்கு மட்டும் கடவுள் கொடுக்கவில்லை. அதை மற்றவர்களுக்கும் பயன்படுத்தணும் நினைக்கிறேன். அதை நான் பண்ணிட்டு இருக்கிறேன். அதற்காகவே இந்த படங்களை பண்ணுறேன். நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் தாண்டிப் போகவோ, அட்டாக் பண்ணவோ, காலி பண்ணவோ வரலை. இந்த வாழ்க்கை, வாய்ப்பை ஒழுங்கா பயன்படுத்த நினைக்கிறேன். அதுக்கு என்னை விட்டுவிடுங்க. அதைத்தான் நான் கேட்கிறேன்.
இந்த படங்களால் நான் கத்துகிடுறேன். நான் ரீமேக் படங்கள் பண்ணுவதில்லை. கதை கேட்டுதான் பண்ணுறேன். என் மைனஸ்களை பிளஸ் ஆக்க நினைக்கிறேன். மக்கள் தொடர்ந்து கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி. இண்ட்ஸ்ரியில் சிலர் ஏதாவது தடைகள் போட்டுகிட்டு இருக்காங்க. அதை தாண்டி வர ரெடி. அதை நீக்கிவிட்டால் பல இயக்குனர்களை உருவாக்குவன் என்றார்.
விழாவில் பேசிய சரத்குமார், ‛‛இந்தியளவில் சிறந்த நடிகை ராதிகா. அவருக்கு தேசிய விருது தரப்பட வேண்டும். அதற்காக நான் கூவிக் கொண்டே இருப்பேன்'' என்றார்.
ராதிகாவின் பல ஆண்டு நெருங்கிய தோழியான ஸ்ரீபிரியா, ராதிகாவை வாழ்த்தும்போது கண்கலங்கினார்.
எப்போ பராசக்தி படம் நடிச்சியோ அப்பவே உன் புத்தி தெரிஞ்சு போச்சு