உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' வசூல் குறைவு: பின்னணியில் இத்தனை காரணங்களா?

'ஜனநாயகன்' வசூல் குறைவு: பின்னணியில் இத்தனை காரணங்களா?


தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி வசூல் என்பது கனவாகவே இருக்கிறது. விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் அந்த வசூலை ஈட்டும், முதல்நாளில் தமிழகத்தில் 50 கோடி, உலகளவில் 150 கோடியை ஈட்டும் என்று பேட்டி கொடுத்தனர். ஆனால், அந்த வசூலை படம் அள்ளவில்லை. இன்று வரை படம் 250 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளது. இந்த வாரம் இன்னும் வசூல் குறைய வாய்ப்பு என்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

முதல் காரணம், படம் லேட்டாக வந்ததால் எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது. 1 கோடிக்கும் அதிகமானவர்கள் படத்தை பார்த்துவிட்டதால் தியேட்டருக்கு வரவில்லை. ஜனநாயகன் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்தது. இதனால், 18 வயதுக்கு குறைவானவர்கள் படம் பார்க்க முடியாது. அப்படி குழந்தைகளுடன் வந்தவர்கள் திருப்பி அனுப்பபட்டனர். இதனால், பலர் குடும்பமாக படம் பார்க்க முடியவில்லை. குழந்தைகள், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் பெண்கள் கூட்டம், குடும்ப கூட்டம் குறைந்துவிட்டது. இதுவும் படத்துக்கு பெரிய மைனஸ்.

முந்தைய விஜய் படங்களுக்கு ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பு இருந்தது. இந்த படத்துக்கு அது குறைவு. ரசிகர்கள் கட்சிகாரர்காக ஆகிவிட்டதால் பெரிய அளவில் படத்தை மக்களிடம் கொண்டு செல்லவில்லை. ரசிகர் மன்ற காட்சிகளும் குறைவு. தவிர, முதல்நாளில் இருந்து படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வரவில்லை. படம் பார்த்தவர்கள் சுமார், ஆக்ஷன், வன்முறை அதிகம் என்றனர். இதனால் விஜய் ரசிகர்களை தவிர மற்றவர்கள் படம் பார்க்க ஆர்வம் காண்பிக்கவி்லை. ஜனநாயகன் படத்துக்கு பப்ளிசிட்டியும் இல்லை.

மலேசியாவில் பாடல் வெளியீட்டுவிழா நடந்தது. இந்தியாவில், தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. சில மீடியாக்களுக்கு மட்டுமே இயக்குனர் வினோத் பேட்டி கொடுத்தார். படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உட்பட யாரும் படம் குறித்து பேசவில்லை. ஹீரோ படம் ரிலீஸ் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு டுவிட் போடவில்லை. ரிலீசுக்கு முன்பு அவர் தனியாக படம் பார்த்தால், அந்த சமயத்தில் கூட படம் குறித்து எதுவும் சொல்லவில்லை. இது பெரிய மைனஸ் ஆக அமைந்தது.
மேலும் ஜனநாயகன் விஜயின் மற்ற படங்கள் போல, ஆடல், பாடல், காமெடி இல்லாத கமர்ஷியல் இல்லாத வன்முறை படம் என்ற தகவல், வசூல் பாதிக்கப்பட்டது. தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகளும் படத்தை ஓட வைக்க முன்பும், படம் வெளியான பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், ஜனநாயகன் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. வெற்றி படமா? தயாரிப்பாளருக்கு லாபம் தந்த படமா என்பதிலும் சந்தேகம் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !