காதலியை கரம்பிடித்த அஷ்வின் கார்த்தி
ADDED : 795 days ago
சின்னத்திரை நடிகர் அஷ்வின் கார்த்தி ஆர்ஜேவாக தனது கேரியரை ஆரம்பித்து இன்று சீரியல்களில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் கார்த்திக்கு அவரது காதலியான காயத்ரி என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து இருவருக்கும் எப்போது திருமணம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது கார்த்தி - காயத்ரியின் திருமண வைபவம் கோலாகலமாக முடிந்துள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் அனைவரும் திருமண தம்பதியினருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.