பாலகிருஷ்ணாவின் 109வது படத்தில் இணைந்த பிரபலங்கள்
ADDED : 919 days ago
நடிகர் பாலகிருஷ்ணா நடித்து சமீபத்தில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வால்டர் வீரய்யா பட இயக்குனர் பாபி இயக்கத்தில் தனது 109வது படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.
இந்த நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் கவுதம் மேனன் ஆகிய இருவரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.