மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
646 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
646 days ago
ஸ்ரீ ஆண்டாள் மூவிஸ் சார்பில் பி.வீர அமிர்தராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ராஜா முகம்மது இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜெயகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'முனியாண்டியின் முனி பாய்ச்சல்'. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ராஜா முகமது பேசியதாவது:
மதுரையில் என் நண்பன் ஜெயகாந்த் உடன் பாண்டி கோயிலில் அமர்ந்து அந்த காவல் தெய்வத்தின் கதைகளையும் அங்கு நடந்த அதிசய நிகழ்வுகளைப் பற்றியும் பேசும் போது, இந்த தெய்வத்தின் கதையை ஏன் நாம் திரைப்படத்தில் கொண்டு வரக்கூடாது. இதைப் பற்றி யாருமே பேசியதில்லையே என்ற எண்ணம் தோன்றியது.
எனக்குத் தெரிந்து வருடத்தின் 365 நாட்களும் கடா வெட்டி பூஜை நடக்கின்ற கோயில் முனியாண்டி கோயிலாகத்தான் இருக்கும். சிலருக்கு நம்பிக்கை இருக்கும் சிலருக்கு நம்பிக்கை இருக்காது. ஆனால் நான் நேரில் பார்த்து இருக்கிறேன். அந்த கோயிலின் பூசாரி அருள் வாக்கு சொல்லும் போது அவரின் குரல் மாறிப் போய், வேறொரு நபராகவே என் கண்களுக்குத் தெரிவார்.
நாங்கள் படம் தொடர்பான எல்லா வேலைகளுக்கும் பாண்டி கோயிலில் முதலில் உத்தரவு கேட்போம். எங்கள் தயாரிப்பாளர் வீர அமிர்தராஜின் குல தெய்வம் முனியாண்டிதான். அவர் இப்படத்தை தயாரிப்பதற்கு மிக முக்கிய காரணமும் அதுதான்.
தயாரிப்பாளர் இப்படத்தைப் பணத்துக்காக தயாரிக்கவில்லை என்றாலும் அவருக்கு லாபத்தை கொடுக்க வேண்டும். நாயகனாக ஜெயகாந்திற்கும், இயக்குநரான எனக்கும் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறோம். அது அப்படியே நடக்கும் என்றும் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
646 days ago
646 days ago