‛வேட்டையன்' ஆக மாறிய ரஜினி : ‛குறி வச்சா இரை விழணும்...'
ADDED : 904 days ago
ஜெயிலர் படத்திற்கு பின் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். ரஜினியின் 170வது படமாக உருவாகும் இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் பல கட்டமாக நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.
இந்நிலையில் ரஜினி பிறந்தநாளான இன்று(டிச., 12) படத்திற்கு ‛வேட்டையன்' என தலைப்பு வைத்துள்ளதாக வீடியோ வெளியிட்டு உள்ளனர். அதில் ஸ்டைலாக நடந்து வரும் ரஜினி, கண்ணாடியை அவரது ஸ்டைலில் மாட்ட, ‛குறி வச்சா இரை விழணும்' என பஞ்ச் டயலாக் பேசி உள்ளார்.