‛லால் சலாம்' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து தகவல் இதோ
ADDED : 1028 days ago
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் படம் 'லால் சலாம்'. நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இதில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
2024 பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 21ந் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.