விஜய் 68வது படத்தில் இணைந்த இளம் நடிகை
ADDED : 917 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, துருக்கி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இப்போது ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல இளம் நடிகை மாளவிகா சர்மா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இதற்கு முன் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் காபி வித் காதல் என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.