தனுஷ் படத்தில் இணைந்த பைட் கிளப் பிரபலம்
ADDED : 815 days ago
நடிகர் தனுஷ் தற்போது தனது அக்கா மகனை வைத்து மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் அனிகா சுரேந்திரன், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறுகிய நாட்களில் இதன் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக சமீபத்தில் வெளிவந்த 'பைட் கிளப்' பட ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பொன்னியின் செல்வன் 1ம் பாகத்தில் உதவி ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.