உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூரியின் கருடன் படத்தின் ரிலீஸ் எப்போது

சூரியின் கருடன் படத்தின் ரிலீஸ் எப்போது

விடுதலை படத்திற்கு பிறகு நடிகர் சூரி தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' என்கிற முழு நீள ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றி மாறன் கதையில் உருவாகும் இதன் படப்பிடிப்பு கும்பகோணம், தேனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதில் சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 2024 மார்ச் 29ந் தேதி புனித வெள்ளி தினத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !