உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜயகாந்தின் கோபத்தில் நியாயம் இருக்கும் : கமல் இறுதி அஞ்சலி

விஜயகாந்தின் கோபத்தில் நியாயம் இருக்கும் : கமல் இறுதி அஞ்சலி

மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று இறுதி மரியாதை செய்தார். உடல்நலக்குறைவால் நடிகர் விஜயகாந்த் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் : எளிமை, அன்பு, உழைப்பு, நட்பு, பெருந்தன்மைக்கு ஒரே பெயர் விஜயகாந்த். அவர் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்திற்கு வருவதற்கு முன் எப்படி என்னிடம் பழகினாரோ அப்படி தான் நட்சத்திர அந்தஸ்திற்கு வந்தபிறகும் பழகினார். எந்தளவு பணிவு இருக்குமோ அதே அளவு நியாயமான கோபமும் இருக்கும். அவரது கோபத்திற்கு நானும் ரசிகன். தனது நியாயமான கோபத்தால் தான் பொது வாழ்க்கைக்கு வந்தார் என நான் நம்புகிறேன். நல்ல நண்பருக்கு மனபாரத்துடன் விடை கொடுத்துவிட்டு செல்கிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !