கமல் படத்தில் இணைந்த கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ்
ADDED : 879 days ago
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது 234வது படமாக 'தக் லைப்' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இதில் கமல் உடன் இணைந்து நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது கவுதம் கார்த்திக் மற்றும் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் இப்படத்தில் இணைந்ததாக இன்று படக்குழு அறிவித்துள்ளனர். இம்மாதத்தில் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.