மணிரத்னத்தின் அபிமான கதாநாயகியாக மாறும் ஜஸ்வர்ய லஷ்மி
ADDED : 637 days ago
மலையாள நடிகை ஜஸ்வர்ய லஷ்மி அங்கு பிரபலமான நடிகையாக இருந்தாலும் தமிழில் 'ஜகமே தந்திரம்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் ஆக்ஷன், கேப்டன், கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1, 2 படங்களில் முக்கிய வேடத்தில் ஜஸ்வர்ய லஷ்மி நடித்திருந்தார். இதனால் அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது.
தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைப்' படத்தில் ஜஸ்வர்யா லஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.