மகேஷ் பாபு ஜோடியாக இந்தோனேஷிய நடிகை
ADDED : 633 days ago
ஆர்.ஆர்.ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றி, உலக அங்கீகாரம் இவற்றுக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படம் ஹாலிவுட் தரத்திற்கு உருவாக இருக்கிறது. 'இண்டியானா ஜோன்ஸ்' மாதிரியான புதையலை தேடிச் செல்லும் அட்வென்ஜர் பேண்டசி படமாக இது உருவாக இருக்கிறது. இதில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் 4 பாகங்களாக தயாராக இருக்கிறது. உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் கதை நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதில் மகேஷ்பாபு ஜோடியாக இந்தோனேஷிய நடிகை செல்சியா இஸ்லன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். சமீபத்தில் அவருக்கு டெஸ்ட்ஷூட் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.