உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவுண்டமணி பாணியில் ஏர்போர்ட்டில் புலம்பிய ரோபோ சங்கர்

கவுண்டமணி பாணியில் ஏர்போர்ட்டில் புலம்பிய ரோபோ சங்கர்

பிரபல நடிகர் ரோபோ சங்கர் கடந்த ஓராண்டுக்கு முன்னர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மிகவும் மெலிந்த உடலோடு காணப்பட்டார். அப்போது அவரை சுற்றி பல வதந்திகள் எழுந்தன. அதையெல்லாம் உடைத்தெறிந்து பாடிபில்டிங் நிகழ்வில் தன்னை மீண்டும் நிரூபித்த ரோபோ சங்கர் தற்போது படங்களில் நடித்து வருவதோடு, டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

இந்நிலையில் வீல்சேரில் உட்கார்ந்து கொண்டிருக்க அவரது மனைவி தள்ளிச் செல்வது போல் வீடியோ ஒன்று வைரலானது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் மீண்டும் ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு என்று பயந்தனர். ஆனால், அவரது உடல்நலனுக்கு ஒன்றுமில்லை.

சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ள ரோபோ சங்கர் ஏர்போர்ட்டில் இருக்கும் லக்கேஜ் டிராலியில் உட்கார்ந்து தனது மனைவியுடன் ரீல்ஸ் செய்துள்ளார். ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் கவுண்டமணி - கோவை சரளா ஆகியோர் ஏர்போர்ட்டில் படும் பாட்டை இப்போது இவர் ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோவில் வரும் காட்சி தான் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !