ஸ்ரீ லீலாவிற்கு பதிலாக மீனாட்சி சவுத்ரி?
ADDED : 615 days ago
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தை ஜெர்ஸி பட இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்குகிறார் . சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாக அறிவித்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் ஸ்ரீ லீலா வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக கதாநாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இவர் இல்லாமல் அனிமல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை த்ரிப்தி திம்ரி உடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.