உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசியல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க புதிய செயலி உருவாக்கும் விஜய்

அரசியல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க புதிய செயலி உருவாக்கும் விஜய்

நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை அவர் எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இந்நிலையில் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக விஜய் டெக்னாலஜி மூலம் உறுப்பினர்களை இணைக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக விரைவில் அவர் ஒரு செயலியை அறிமுகம் செய்யப் போகிறார். இன்னும் ஐந்து நாட்களில் அதை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளார் . விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்ததானம் செய்யப்பட்ட போதும் ஒரு செயலியை உருவாக்கி ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் அதில் பதிவு செய்யுமாறு அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் தான் தற்போது அதே பாணியில் தனது புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கவும் செயலியை அறிமுகப்படுத்தப் போகிறாராம் விஜய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !