தொழிலதிபர் ஆகிறார் சினேகா
ADDED : 608 days ago
தென்னிந்திய சினிமாவில் புன்னகை இளவரசி என்ற கொண்டாடப்பட்ட நடிகை சினேகா, தற்போது விஜய்யுடன் ‛தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். சினேகாவின் தந்தை பிரபலமான ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். சினேகாவின் சகோதரி கீதாவும் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் வழியில் சினேகாவும் தொழிலதிபர் ஆகிறார்.
'சிநேஹாலயா சில்க்ஸ்' என்ற புடவை கடை தொடங்குகிறார் சினேகா. இது சென்னை தி.நகரில் புடவைக்கென்றே தொடங்கப்படும் வியாபார நிறுவனமாகும். இதன் திறப்பு விழா வருகிற 12ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக தனக்கு நெருக்கமான திரையுலக பிரபலங்களையும், நண்பர்களையும் அழைத்துள்ளார் சினேகா. ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை அவருக்குக் கூறி வருகின்றனர்.