‛தக் லைப்' படத்திற்காக மூன்று படங்களை ஒதுக்கிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!
ADDED : 862 days ago
மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி மலையாள சினிமாவில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் ஜகமே தந்திரம், ஆக்ஷன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
தற்போது கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைப்' என்கிற படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இந்த படத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்பட வேண்டாம் என்பதற்காக பிரேம் குமார் இயக்கி வரும் கார்த்தி 27 மற்றும் அவரது மனைவி இயக்கவுள்ள புதிய படம், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய படம் என மூன்று படங்களில் நடிக்காமல் ஐஸ்வர்யா லக்ஷ்மி மறுத்துவிட்டதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.