கொட்டுக்காளி படத்திற்காக ரிஸ்க் எடுத்த சூரி
ADDED : 586 days ago
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி உள்ள படம் கொட்டுக்காளி. சூரி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அன்னா பென் நடித்திருக்கிறார். சமீபத்தில் பெர்லின் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது. இதில் தனது கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக கரகரப்பான குரல் வேண்டும் என்று இயக்குனர் கேட்டதாகவும், அதற்காக மருத்துவர் ஒருவரை அணுகி அவர் சொன்னது போன்று சில நாட்டு மருந்துகளை எடுத்துக்கொண்டு கொட்டுக்காளி படத்தில் கரகரப்பான குரலில் டப்பிங் பேசியதாக தெரிவித்திருக்கிறார் சூரி. அதனால் இந்த படம் என்னை இன்னொரு கோணத்தில் வித்தியாசப்படுத்தி காட்டுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என்கிறார் சூரி.