உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் வெங்கடேஷுக்கு ஜோடியான த்ரிஷா

மீண்டும் வெங்கடேஷுக்கு ஜோடியான த்ரிஷா

பொன்னியின் செல்வன், லியோ படங்களுக்கு பிறகு அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தக் லைப் மலையாளத்தில் இரண்டு படங்கள் என பிசியாக நடித்து வரும் த்ரிஷா, 18 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் விஸ்வம்பரா என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் , தற்போது இன்னொரு தெலுங்கு நடிகரான வெங்கடேஷுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் த்ரிஷா. ஏற்கனவே வெங்கடேஷிற்கு ஜோடியாக தெலுங்கில் அடவாரி மடலகு அர்த்தாலே வெருலு மற்றும் நாம்ப் வெங்கடேசா போன்ற படங்களின் நடித்துள்ள த்ரிஷா, தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். இந்த படத்தை அணில் ரவிப்புடி என்பவர் இயக்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !