உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினிகாந்த்தின் 43வது மணநாள் : மகள் சவுந்தர்யா வாழ்த்து

ரஜினிகாந்த்தின் 43வது மணநாள் : மகள் சவுந்தர்யா வாழ்த்து

தமிழ் சினிமா உலகின் டாப் நடிகர்களில் முதன்மையானவராக இருக்கும் ரஜினிகாந்த் இன்று அவரது 43வது திருமண நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினி, லதா தம்பதியினரின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், பெற்றோரின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து நெகிழ்வான பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார்.

“இணைபிரியாத 43 வருடங்கள்… எனது செல்லங்கள் அம்மா, அப்பா. எப்போதும் ஒருவருக்கொருவர் திடமாக நிற்பார்கள். 43 வருடங்களுக்கு முன்பு அவர்கள் பரிமாறிக் கொண்ட செயின், மோதிரம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு வருடமும் அம்மா மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் இருவரையும் அதிகமாக நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !