மீண்டும் அஜர்பைஜானுக்கு பறக்கும் விடாமுயற்சி படக்குழு
ADDED : 588 days ago
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் தற்போது 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் அஜர்பைஜானில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் 70 சதவீத படப்பிடிப்பு உடன் அங்கு படப்பிடிப்பை முடித்து ரஷ்யாவிற்கு செல்ல படக்குழு திட்டமிட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பை தொடங்க தாமதம் ஆனதால் இப்போது அஜர்பைஜானில் வானிலை மாற்றம் சரியானதால் விரைவில் அஜர்பைஜானில் படப்பிடிப்பை தொடங்க விடாமுயற்சி படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.