‛கள்வன்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஜி.வி. பிரகாஷ்!
ADDED : 805 days ago
பி.வி. ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கள்வன்'. பாரதிராஜா, இவானா, தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் யானை தந்தம் குறித்து பேசும் படமாக உருவாகிறது.
இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ரெபல்' படம் மார்ச் 22ம் தேதி வெளியாவதைத் தொடர்ந்து தற்போது கள்வன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 4ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.