மாரடைப்பு : காமெடி நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதி
ADDED : 580 days ago
பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் சந்தானத்தின் காமெடி குழுவில் இருப்பவர் சேஷூ. சின்னத்திரையில் சந்தானம் ‛லொள்ளு சபா' நிகழ்ச்சியை வழங்கிய காலம் முதல் அவருடன் பயணித்து வருகிறார். அந்த நிகழ்ச்சி மூலமே ரசிகர்களை கவர்ந்த சேஷூ தொடர்ந்து சந்தானத்துடன் வெள்ளித்திரையிலும் பயணிக்க தொடங்கினார். அவரது பல படங்களில் காமெடி வேடங்களில் அசத்தி உள்ளார். குறிப்பாக சந்தானம் நடித்த ‛ஏ1' படம் மற்றும் சமீபத்தில் வெளியான ‛வடக்குப்பட்டி ராமசாமி' போன்ற படங்களில் இவரின் காமெடி ரசிகர்களை கவர்ந்தது.
சென்னையில் வசித்து வரும் சேஷூவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.