விக்ரம் 62வது படத்தின் படப்பிடிப்பு எப்போது?
ADDED : 841 days ago
தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். பார்லிமென்ட் தேர்தலுக்கு பின் இந்தப்படம் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிபு தமின்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். தற்போது படத்தின் திரைக்கதை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்தமாதம் ஏப்ரலில் தொடங்குவதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.