உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யின் ‛தி கோட்' ஆகஸ்ட் 23ல் திரைக்கு வருகிறது

விஜய்யின் ‛தி கோட்' ஆகஸ்ட் 23ல் திரைக்கு வருகிறது

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் ‛தி கோட்'. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிறப்பு வேடத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கேரளாவில் படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில் அடுத்தபடியாக ரஷ்யா சென்று சில பாடல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார் வெங்கட்பிரபு. இன்னொரு பக்கம் கோட் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் நடைபெற்று வருகிறது.

கோட் படம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ல் திரைக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ஆகஸ்ட் 23ம் தேதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !