உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் பிப்ரவரி 26ம் தேதியான நேற்று ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் அவர்கள் இருவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்கள் இருவரது முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்திற்கு பிறகு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் நேரில் சந்தித்துள்ளார்கள். அப்போது மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ள தங்களது திருமண வரவேற்பில் பங்கேற்குமாறு அவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்கள். மோடி, அமித்ஷா ஆகியோரை விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !