மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம்
கடந்த வருடம் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படங்களின் அறிவிப்புகள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அதேசமயம் நான்கு வித்தியாசமான படங்களில் தான் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்து இருந்தார் விக்ரம். அந்த வகையில் அவர் மலையாள இயக்குனர் டைரக்சனில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
கடந்த 2024ல் டொவினோ தாமஸ் நடிப்பில் வரலாற்று பேண்டஸி படமாக உருவாகி இருந்த அஜயன்டே ரெண்டாம் மோஷனம் படத்தை இயக்கிய ஜிதின் லால் டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக விக்ரம் நடிப்பில் மலையாள இயக்குனர் ஆர்.எஸ் விமல் இயக்கத்தில் உருவாவதாக இருந்த கர்ணன் படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.