பிரபல இயக்குனர் மகனுக்கு வில்லனாகும் ஒளிப்பதிவாளர்
ADDED : 756 days ago
தமிழில் மைனா, கும்கி, பைரவா, காக்கி சட்டை, ஸ்கெட்ச், தர்மதுரை போன்ற பல முக்கிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சுகுமார். இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளது தெரியவந்து தற்போது அவரின் ஆசை நிறைவேறியது. அதன்படி, இயக்குனர் முத்தையா தனது மகனை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை உருவாக்கி வருகிறார். இதில் ஏற்கனவே நடிகர் பரத் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்போது மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் ஒளிப்பதிவாளர் சுகுமார் நடித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.