செந்தில், யோகி பாபு நடிக்கும் ‛கே.எம்.கே'
ADDED : 559 days ago
2012ம் ஆண்டில் கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம் 'சகுனி'. இதனை சங்கர் தயாள் என்பவர் இயக்கினார். பெரும் எதிர்பார்பில் வெளிவந்த இப்படத்திற்கு சுமாரான வரவேற்பு தான் கிடைத்தது. இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஷங்கர் தயாள் புதிய படம் ஒன்றைக் இயக்கியுள்ளார். நடிகர் செந்தில், நடிகர் யோகி பாபு இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இதற்கு 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.
ஷங்கர் தயாள் கூறுகையில், “குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அரசியல் படம். சமூகத்தை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறேன். குழந்தைகளுக்கு அரசியலையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் மூலமாக ஒரு முக்கியமான கருத்தையும் சொல்கிறோம். யாரையும் காயப்படுத்தாத ஜாலியான படமாக இருக்கும்” என்றார்.