உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை

சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை

சென்னை மந்தை வெளிப்பாக்கம் ஈஸ்ட் சர்க்குலர் ரோடு, சீர்காழி கோவிந்தராஜன் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை(பிப்., 18) காலை இதற்கான பெயர் பலகையை திறந்து வைக்கிறார்.

சீர்காழியில் பிறந்த கோவிந்தராஜன் திரைப்பாடல்கள், ஆன்மிக பாடல்கள், தனி இசை பாடல்கள் என 16 ஆயிரம் பாடலை பாடியுள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்றவர் தன்னுடைய 56வது ஆண்டிலேயே காலமானார். இவர் வசித்து வந்த சென்னை மந்தவெளிப்பாக்கம் பகுதியில் உள்ள தெருவுக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என்று சீர்காழி கோவிந்தராஜன் குடும்பத்தினர் மற்றும் அவருடைய மகன் டாக்டர் சிவசிதம்பரம் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டது. அதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் நாளை காலை சென்னை மந்தவெளிப்பாக்கம் ஈஸ்ட் சர்குலர் ரோடு சீர்காழி கோவிந்தராஜன் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த பெயர் பலகையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

ஆன்மிமீக பாடல்களை அதிகம் பாடினாலும் தமிழ் மீது உள்ள பற்று காரணமாக திராவிட கழக மேடையில் கூட சீர்காழி பாடியிருக்கிறார். எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கும் அவருடைய அரசியல் வாழ்விற்கு பயன்படும் வகையில் தொட்ட இடம் துலங்க வரும், நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் உள்ளிட்ட பாடல்களை பாடி இருக்கிறார். சீர்காழியின் சாதனையை போற்றும் வகையில் சென்னையில் அவர் பெயரில் தெரு அமைவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !