உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது!

ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது!


ரஜினி நடிப்பில் கடைசியாக 2025 ஆகஸ்ட்டில் திரைக்கு வந்த படம் 'கூலி'. கலவையான விமர்சனங்களை பெற்ற அப்படம் 500 கோடி வசூலித்தது. இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக 'ஜெயிலர்-2' படத்தில் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ளார் ரஜினி. இந்த படம் இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தேதியை மறுபரிசீலனை செய்து வருகிறார்கள்.

ஜூன் 12 என்ற தேதியை மாற்றி ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதோடு இந்த படத்தில் ரஜினி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்ட நிலையில் மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது நெல்சன் படமாக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !