உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ராம் இன் லீலா' தலைப்புக்கு சென்சார் கிடைக்குமா?

'ராம் இன் லீலா' தலைப்புக்கு சென்சார் கிடைக்குமா?


ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் அங்கித் மேனன் இசையமைப்பில், ரியோ, வர்திகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராம் இன் லீலா'.

நேற்று இப்படத்தின் நாயகன் ரியோவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குவினர் அவருக்கு ஒரு வாழ்த்து போஸ்டரை வெளியிட்டிருந்தனர். அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள ரியோவின் ஆடை ஆபாசம் கலந்த விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக கடவுள் பெயரில் திரைப்படங்களின் பெயர்களில் தலைப்புகள் இருந்தால் அதை சென்சார் போர்டு மாற்றச் சொல்கிறது. கடந்த வாரம் வெளியான 'கபுள் பிரண்ட்லி' படத்தின் தலைப்புக்காக அதற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.

'ஹே பகவான்' என்ற தெலுங்குப் படத்திற்கும் தலைப்பை மாற்றச் சொன்னதால் 'ஹே பல்வந்த்' என்று மாற்றியுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்பு 'சாய்வாலா' என்ற படத்தின் பெயர் 'நவாப்ஸ் கேப்' என்றும், 'வானரா' என்ற படத்தின் தலைப்பு 'வன வீரா' என்றும் மாற்றப்பட்டது.

'ராம் இன் லீலா' என்ற பெயரில் இந்துக்கள் வழிபடும் 'ராம்' பெயர் இப்போது தமிழ்ப் படமான 'ராம் இன் லீலா' என்று வைக்கப்பட்டுள்ளது. போஸ்டர் டிசைனே இது எந்த மாதிரியான ஒரு படம் என்பதை புரிய வைக்கிறது. படக்குழுவே இத்தலைப்பை மாற்றினால் நல்லது, இல்லை என்றால் இப்போதைய சூழ்நிலையில், சென்சார் போர்டு இத்தலைப்புக்கு நிச்சயம் அனுமதி தராது என்று திரையுலகில் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !