உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிலீசான நான்காம் நாளே இரண்டாம் பாகத்தை அறிவித்த 'பவ்மா' படக்குழு

ரிலீசான நான்காம் நாளே இரண்டாம் பாகத்தை அறிவித்த 'பவ்மா' படக்குழு


ஒரு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று கோடிகளை வசூலித்த பின்னர்தான் அதற்கு இரண்டாம் பாகம் உருவாகுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்படும்.. அதுவும் பிரபலங்களின் படத்திற்குத்தான்.. ஆனால், கடந்த வாரத்தில் மலையாளத்தில் வெளியான 'பவ்மா' திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இன்று கொண்டாடிய சக்சஸ் மீட்டில் இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் இயக்குனரும் நடிகருமான திலீஷ் போத்தன். சமீப வருடங்களில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்ற 'பிரேமலு' மற்றும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' ஆகிய படங்களின் தயாரிப்பாளரும் கூட.. அடுத்ததாக மோகன்லாலை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். மேலும் இதில் குறிப்பிடத்தக்கபடி நடிகர் வினித், அதிதி பாலன் உள்ளிட்ட சிலரும் நடித்துள்ளனர். ரெஜின் எஸ்.பாபு இப்படத்தை இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் கிளைமாக்ஸில் விடை தெரியாமல் விடப்பட்ட பல மர்மங்களுக்கும் கேள்விகளுக்கும் இரண்டாம் பாகம் விடை அளிக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !