உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா!

திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா!


விஜய தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் 'கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்' போன்ற படங்களில் இணைந்து நடித்தார்கள். அப்போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி கடந்த பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்தார்கள்.
இந்நிலையில், விஜய் தேவர கொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் வருகிற 26ம் தேதி உதய்ப்பூர் அரண்மனையில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், திருமணத்திற்கு பிறகு மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஹிந்தியில் தான் கமிட்டாகி இருந்த ஒரு படத்தில் இருந்து வெளியேறி உள்ளார் ராஷ்மிகா. அதாவது ஏற்கனவே ஹிந்தியில் 'குட் பை, அனிமல், ச்சாவா, தம்மா' என பல படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, தற்போது 'காக்டெய்ல்-2, மைசா' போன்ற படங்களிலும் நடித்து முடித்து இருக்கிறார். இந்நிலையில்தான் அமித் சர்மா இயக்கத்தில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக 'ராம்கம்' என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார் ராஷ்மிகா. ஆனால் தற்போது தனது திருமணத்தை காரணம் காட்டி, திருமணத்துக்கு பிறகு சில மாதங்கள் தான் ஓய்வில் இறங்கப்போவதாக சொல்லி அந்த படத்தில் இருந்து அவர் வெளியேறி இருப்பதாக பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !